எங்கள் மீது மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (05 மே 2020): எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும்,…

மேலும்...

மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...

கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்தேனா? – நடிகர் அமீர்கான் விளக்கம்!

புதுடெல்லி (05 மே 2020): கோதுமை பாக்கெட்டுக்குள் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் அமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்கு பெரிதும் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நடிகர் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ 15000 ரூபாய் வைத்திருப்பதாக அந்த செய்தியில் விளக்கப்பட்டது. மேலும் இதனை நடிகர் அமீர்கான் தான் செய்தார் என்றும் தகவல் பரவியது….

மேலும்...

கொரோனா வைரஸ் – ராகவேந்திரா மண்டபம் குறித்து ரஜினி கூறியது என்ன?

சென்னை (04 மே 2020): சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு தரமுடியாது என்று கூறியதாக வெளியான தகவலுக்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார்,…

மேலும்...

மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சாமி காட்டம்!

சென்னை (04 மே 2020): புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திரு. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், பாதி பட்டினியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மோசமானது என கடுமையாக விமர்சித்தார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள…

மேலும்...

எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

மேலும்...

கொரோனா கொடுமையில் இப்போது இது அவசியமா?

சென்னை (04 மே 2020): கொரோனா வைரஸ் ஒரு புறம் பரவிக் கொண்டு இருக்க டாஸ்மாக் கடைகளை வரும் 7 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுb செயல்பட வேண்டும். டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க அனுமதிஇல்லை. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே…

மேலும்...

மே.7 ஆம் தேதி முதல் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு!

புதுடெல்லி (04 மே 2020): மே 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமானபோக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள்…

மேலும்...

நடிகர் ரஜினிக்கு சென்னை மாநகராட்சி கடிதம்!

சென்னை (04 மே 2020): சென்னை மாநகராட்சி சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள்,…

மேலும்...