மதுபான கடையில் பிரபல நடிகை – வைரல் வீடியோ!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் மதுபான கடையில் மது வாங்கி வருவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உரடங்கு சமயத்தில் நடிகைகள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைகளில் மது வாங்குவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரகுல் அது குறித்து பதிலளித்துள்ளார் , “மருந்து கடைகளில் மதுபானம்…

மேலும்...

கொரோனா ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

நியூயார்க் (09 மே 2020): கொரோனா குறித்த சீன ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லியுவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர் அவரது காரில் தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார். லியுவை கொன்றுவிட்டு…

மேலும்...

டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி…

மேலும்...

சவூதியிலிருந்து 152 பயணிகளுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது!

ரியாத் (08 மே 2020): சவூதி அரேபியாவிலிருந்து 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டது. கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. நேற்று மாலை இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 354 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தது. இந்நிலையில்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல…

மேலும்...

சென்னையில் முக்கிய நபர்களை தாக்கும் கொரோனா – தொடர் அதிர்ச்சி!

சென்னை (08 மே 2020): சென்னையில் முதன்மை பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

டாஸ்மாக் கொடுமை – முதல்வர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

மதுபானம் வீட்டுக்கே சென்று டெலிவரி – சட்டம் அமல்!

சண்டீகர் (07 மே 2020): பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அமலுக்‍கு வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மது கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளது. நபர் ஒருவருக்‍கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்‍கு…

மேலும்...