தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

Share this News:

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 316 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் பாதிக்‍கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 644-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு வயது ஆண் குழந்தை, ஒன்றரை வயது பெண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, 4 வயதாகும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்‍கு தொற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் இரண்டரை வயது ஆண் குழந்தைக்‍கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் இருவர் கொரோனாவுக்‍கு உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்‍கை 37ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 63 பேருக்‍கும், விழுப்புரம் – 45 பேருக்‍கும், பெரம்பலூரில் 33 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் 32 பேருக்‍கும், அரியலூரில் 24 பேருக்‍கும், திருவண்ணாமலையில் 17 பேருக்‍கும், செங்கல்பட்டில் 13 பேருக்‍கும், காஞ்சிபுரத்தில் இருவருக்‍கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இதுவரை 1 ஆயிரத்து 547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Share this News: