பேருந்துகள் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்!

Share this News:

சென்னை (07 மே 2020): ஊரடங்கு முடிவடைந்த பின்னர், 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மே 17-க்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படும் போது, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும், பேருந்தை இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்ப, இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும் என்றும், பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்தால் 6 அடி இடைவெளி அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஜன்னல்கள் கட்டாயமாக திறந்திருக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையங்களில் பேருந்துகளை 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், தவறினால் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் நின்றே பேருந்துகளில் ஏற வேண்டும், E-pay, Google pay போன்றவை மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தளவுக்கு பயணிகள் மாதாந்திர பாஸ் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News: