துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

சவூதியில் அனைத்து பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் மூடல்!

ரியாத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு சவூதி அரேபியாவில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மற்றும் உணவகங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வியாழக்கிழமை (பிப் .4), இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உலகின் சில நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை…

மேலும்...

குவைத்தில் அனைத்து உணவகங்கள் கடைகள் மூடல்!

குவைத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக குவைத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மூட உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில், மீண்டும் அது அதிவேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இது மேலும் பரவாமல் தடுக்க வளைகுடா நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியா இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதிக்குள் வர தற்காலிக தடை…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...

82 நாடுகளில் உருமாறிய கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனீவா (02 பிப் 2021): இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா உலகின் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

ஆசிரியைக்கு கொரோனா தொற்று – திறந்த வேகத்தில் காலவரையின்றி மூடப்பட்ட பள்ளி!

திண்டுக்கல் (23 ஜன 2021): திண்டுக்கல் அருகே சின்னகாந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பள்ளி மறுதேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ளது சின்னகாந்திபுரம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. பழநியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது…

மேலும்...

சசிகலாவுக்கு கொரோனா உறுதி!

பெங்களூரு (21 ஜன 2021): சிகலாவுக்கு கோரோனா உறுதிக்கியுள்ள நிலையில் அவரது உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இன்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. D

மேலும்...

சசிகலாவுக்கு கொரோனா? – மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரு (20 ஜன 2021): பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திடீரென காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சாதாரண சுவாச கோளாறு தான் என தெரிவித்தனர். இதனை அடுத்து , பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக்கவுள்ளார் என்பது…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மத்திய அரசு பின்வாங்கல்!

புதுடில்லி (14 ஜன 2021): கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்றும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது, எனவே அதன் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமு ம் பொறுப்பேற்க…

மேலும்...