கொரோனா வைரசுக்கு புதுவகை மருந்து – தமிழக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு!

சென்னை (13 ஜன 2021): கொரோனா வைரஸை ஒழிக்க தினமும் ரசம் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “உங்கள் உணவில் தினமும் ரசம் மற்றும் சாம்பார் சேர்க்கவும். தினமும் குறைந்தது அரை கிளாஸ் அல்லது ஒரு கிளாஸ் ரசம் குடித்தால் . கொரோனா வைரஸ் இறந்துவிடும், அல்லது ஓடிவிடும். நான் ஒவ்வொரு நாளும் ரசம் குடிப்பேன். ”என்றார் ராஜேந்திர பாலாஜி. மேலும் தமிழக உணவுகள் கோவிட்டை எதிர்த்துப் போராட…

மேலும்...

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி – முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு!

சென்னை (11 ஜன 2021): தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய…

மேலும்...

சவூதி அரேபியாவில் அனைத்து சரவதேச விமான சேவைகளையும் மார்ச் 31 முதல் மீண்டும்தொடங்க முடிவு!

ரியாத் (08 ஜன 2021): சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து வான்,…

மேலும்...

சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு…

மேலும்...

சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போட பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரியாத் (06 ஜன 2020): சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. கோவிட் 19 பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் முதல் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள் நாட்டு வெளி நாட்டினர் அனைவரும் செஹாத்தி அப்ளிகேஷன் பயன்பாட்டின் மூலம் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய…

மேலும்...

நாங்கள் ஹீரோக்கள் அல்ல மருத்துவர்கள் – நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான கடிதம்!

சென்னை (05 ஜன 2020): கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் . டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும்…

மேலும்...

மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் முதலில் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் – தலைவர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (04 ஜன 2021): கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கட்டங்கள் முடிவடையாமல் மக்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு கட்ட சோதனை மட்டுமே முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனை முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியை நடைமுறைப்படுத்த மோடி அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு எதிராக முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி ஒப்புதலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் எம்.பி. கூறுகையில், கோவாக்ஸின்…

மேலும்...

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (03 ஜன 2021): கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த…

மேலும்...

சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை நீக்கம்!

ரியாத் (03 ஜன 2021): சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை ஜனவரி 3 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு, அனைத்து எல்லைகளும் இன்று திறக்கப்படுகின்றன. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிவேக வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி எல்லை மூடப்பட்டது. இந்நிலையில் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் இப்போது நாட்டிற்குள் நுழையலாம். சவுதி அரேபியா அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும்…

மேலும்...

உருமாறிய கொரோனா – தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி!

சென்னை (02 ஜன 2021): தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் 29 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு தனி அறையில்…

மேலும்...