குவைத்தில் அனைத்து உணவகங்கள் கடைகள் மூடல்!

Share this News:

குவைத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக குவைத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மூட உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில், மீண்டும் அது அதிவேகத்தில் பரவ தொடங்கியுள்ளது.

இது மேலும் பரவாமல் தடுக்க வளைகுடா நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியா இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதிக்குள் வர தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்நிலையில் குவைத்தில் இரவு நேரங்களில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Share this News:

Leave a Reply