இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை?

புதுடெல்லி (12 மார்ச் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

குவைத்தில் வரும் ஞாயிறு முதல் பகுதி நேர ஊரடங்கு!

குவைத் (05 மார்ச் 2021): குவைத் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு பகுதி நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தவு அமல்படுத்தப்படும். வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த கூட்டத்தில் வெளிநாட்டினரை குவைத்திற்குள் அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில்…

மேலும்...
CORONA-India

கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வருவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (25 பிப் 2021): கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது….

மேலும்...

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்!

மெல்போர்ன் (21 பிப் 2021): ஆஸ்திரேலியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள. அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது….

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (21 பிப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 11,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

கோவிட் விதிமுறைகளை மேலும் நீட்டித்து பஹ்ரைன் உத்தரவு!

பஹ்ரைன் (19 பிப் 2021): புதிய மாறுபட்ட கொரோனா பரவலை தொடர்ந்து பஹ்ரைனில் கோவிட் விதிமுறைகளை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகங்களுக்குள் உணவு பரிமாறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உட்புற உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும். விளையாட்டு பயிற்சி 30 பேருக்கு மேல் செய்ய முடியாது. வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் 30 க்கும் மேற்பட்டவர்களின் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. உட்புற விளையாட்டு வகுப்புகளும் நிறுத்தப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட…

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

கொரோனவை பரப்பும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கைது!

அபுதாபி (14 பிப் 2021): அபுதாபியில் கோவிட் பாசிட்டிவ் ரிபோர்ட்டுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொரோனாவுடன் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், தனது மொபைல் தொலைபேசியில் பெறப்பட்ட கோவிட் நேர்மறை சோதனை முடிவை எடுத்துக்காட்டுகிறார். அதேபோல இன்னொருவர் பொது இடத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வீடியோ கிளிப்பைப் பார்த்த அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்….

மேலும்...

கொரோனா பரவல் – பஹ்ரைனில் மசூதிகள் மீண்டும் மூடல்!

பஹ்ரைன் (10 பிப் 2021): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பஹ்ரைனில் இரண்டு வாரங்களுக்கு மசூதிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிப்ரவரி 11 முதல் நடைமுறைக்கு வரும். கோவிட் மீண்டும் பரவுவதை அடுத்து இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் நேற்று மட்டும் 719 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 323 பேர் வெளிநாட்டவர்கள். மேலும் கொரோனா பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். . தற்போது, ​​6036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 46…

மேலும்...