சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

Share this News:

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் சார்ட்டர்ட் (chartered flight) விமானங்கள் மட்டும் இயங்கி வருகின்றன.

கோவிட் வழக்குகளில் இந்தியாவின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை தொடர்வதால் , தற்போதைய நிலையை கொண்டு , இந்த விஷயத்தில் முடிவெடுப்பது சவுதி சுகாதார அமைச்சகத்திடம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து விவாதித்து இந்தியாவுக்கு விமான சேவையை விரைவில் தொடங்குவது தொடர்பாக கோரிக்கை வைக்கும் நோக்கத்தில், இந்தியத் தூதர் டாக்டர் அவ்சஃப் சயீத், சவுதி சுகாதார அமைச்சர்; தவ்ஃபிக் அல் ரபியாவுடன் கலந்துரையாடினார்.

அப்போது இந்தியாவுக்கு உடனடி விமான சேவைக்கு அனுமதி வழங்குமாறு இந்திய தூதர் சவூதி சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி சர்வதேச விமானங்களுக்கான தடையை நீக்குவதாக சவுதி அரேபியா ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவிற்கான தடை தொடருமோ என்ற அச்சமும் நிலவுகிறது. அதேவேளை தூதரகத்தின் வேண்டுகோளுக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டால் மார்ச் 31க்கு முன்னர் இந்தியாவுக்கான விமான தடையை சவூதி அரேபியா நீக்க வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply