தாலிபான்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டனர்: அமெரிக்கா

நியூயார்க் (10 செப் 2021): அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறிய பின்னர் முதல்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற 113 பேர் கத்தர் வந்தடைந்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழு செயலாளர், அமெரிக்க குடியுரிமை மற்றும் நீண்ட கால அமெரிக்க விசா வைத்திருப்போர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வர அமெரிக்க அரசு கத்தர் நாட்டுடன் இணைந்து முயற்சி செய்தது. தாலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பயணிகள்…

மேலும்...

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தாலிபான் விருது!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடைபெற்ற உயர்கல்விக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுகளில் ‌சல்ஜி பரன் என்ற மாணவி முதலிடம் பெற்றார். அவருடன் முதல் பத்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா உயர்கல்வி அமைச்சரக அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தாலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பகி ஹக்கானி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும்...

இந்தியா ஆப்கான் உறவை தொடர தாலிபான் விருப்பம் !

காபூல்(30 ஆக 2021): இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் உறவை தொடர விரும்புவதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாய் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “”இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப்…

மேலும்...

ஆப்கான் ஐ எஸ் ஐ எஸ் தளங்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

காபூல் (28 ஆக 2021): காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா . நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்கே தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை இரவு காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

மேலும்...

காபூல் விமான நிலையத்தை அதிர வைத்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

காபூல் (27 ஆக 2021): ஆப்கானிஸ்தன் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 90 உயிரிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், காபூல் இரண்டு தற்கொலை குண்டுவீச்சாளர்கள் மற்றும் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டத்தைத் தாக்கியதில் குறைந்தது 90 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டதாகவும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தலிபான்கள் “குண்டுவெடிப்பைக் கண்டித்துள்ளனர்”,இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் இந்த…

மேலும்...

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை!

காபூல் (23 ஆக 2021): காபூல் விமான நிலையத்தின் வடக்கு நுழைவு வாயிலில், ஆப்கன் வீரர்களும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தநிலையில், ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க மற்றும் ஜெர்மன் இராணுவ வீரர்களும் இணைந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த…

மேலும்...

கொரோனா வந்து மீண்டவர்களுக்கு நற்செய்தி!

லண்டன் (20 ஆக 2021): கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு தடுபூசிகள் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர். மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து…

மேலும்...

என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – பரபரப்பில் காபூல்!

காபூல் (16 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படையின் பெரும் பகுதி வெளியேறிவிட்ட நிலையில் 6 ஆயிரம் வீரர்கள் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்….

மேலும்...

அமெரிக்காவில் குழந்தைகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிப்பு!

நியூயார்க் (15 ஆக 2021): அமெரிக்காவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் குழந்தைகள் அதிக அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில்கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 1,900-க்கு மேல் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு டெல்டா வகை கொரோனாவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாத பகுதியில் கொரோனா டெல்டா மாறுபாடு, வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே…

மேலும்...