ஆப்கான் ஐ எஸ் ஐ எஸ் தளங்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

Share this News:

காபூல் (28 ஆக 2021): காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா . நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்கே தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.

இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐ எஸ் எஸ் அமைப்புகளின் தளங்கள் மீது அமேரிக்கா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 31 -க்குள் வெளியேற்ற செயல்முறையை முடிக்க பல்வேறு நாடுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. அதேவேளை, தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 110,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply