ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை!

Share this News:

காபூல் (23 ஆக 2021): காபூல் விமான நிலையத்தின் வடக்கு நுழைவு வாயிலில், ஆப்கன் வீரர்களும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இந்தநிலையில், ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, அமெரிக்க மற்றும் ஜெர்மன் இராணுவ வீரர்களும் இணைந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ஆப்கன் வீரர் உயிரிழந்துள்ளார்; மூவர் காயமடைந்துள்ளனர். இந்தத் தகவலை ஜெர்மன் இராணுவம் வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply