விளாடிமிர் புதின் போட்டுக் கொண்ட தடுப்பூசி இதுதானாம்!

மாஸ்கோ (30 ஜூன் 2021): ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போட்டுக் கொண்ட தடுப்பூசி விவரம் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் விளாடிமிர் புதின், அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோசுகளையும் போட்டுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் மார்ச் மாதத்தில் போடப்பட்டதாகவும், இரண்டாவது டோஸ் ஏப்ரல் மாதத்தில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிபர் விளாடிமிர் புதின் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோ எதுவும் வெளியிடப்படவில்லை. உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்க முதல்…

மேலும்...

50 டிகிரி கடும் வெப்பம் – 486 பேர் பலி!

டொரோண்டோ (01 ஜூலை 2021): கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் போனது கனடா நாடு. அங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள், தடுப்பூசி மையங்களை மூட…

மேலும்...

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டம்!

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று திருமணம் சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, புதிய சட்டத்தினை அமல்படுத்த பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக பல்வேறு தரப்பின் கருத்தை கேட்டுள்ளது…

மேலும்...

பெண்கள் பல கணவருடன் வாழலாம் – சர்ச்சையை கிளம்பியுள்ள புதிய சட்டம்!

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனென்றால் தென் ஆப்ரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதேபோன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை எனவேதான் இந்த மாற்றங்களை…

மேலும்...

அதி வேகமாக பரவும் டெல்டா பிளஸ் வைரஸ் – என்ன செய்ய வேண்டும்? : WHO விளக்கம்

ஜெனிவா (28 ஜூன் 2021): இந்தியாவில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸாக உருவெடுத்தது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கெப்ரேயசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85…

மேலும்...

திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா – கடும் ஊரடங்கு அறிவிப்பு!

டாக்கா (26 ஜூன் 2021): இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

மணிலா (23 ஜூன் 2021): “பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்!” என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அந்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “மக்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். நம் நாட்டில் கொரோனா பரவலால் நெருக்கடி நிலவுகிறது. நாம் ஏற்கனவே கொரோனாவால் கஷ்டப்படுகிறோம். மேலும் நாட்டை கஷ்டப்படுத்தாதீர்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள்” “அதுமட்டுமல்ல நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், பிலிப்பைன்ஸை விட்டு…

மேலும்...

யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

இந்த பாதிப்பு வந்தால் கொரோனா வராதாம்!

நியூயார்க் (17 ஜுன் 2021): சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து “ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை…

மேலும்...

பாகிஸ்தான் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி!

இஸ்லாமாபாத் (02 மே 2021): பாகிஸ்தானில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு பாக்வாக் என் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிநேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...