கொரோனா புதிய வைரஸ தற்போதைய தடுப்பூசிகள் தடுக்குமா?

ஜெனீவா (28 நவ 2021): தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24-ந் தேதி கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ள பெயர்தான் இது. இந்த பெயர், கிரேக்க எழுத்துகளின் 15-வது எழுத்து என்கிறார்கள். இந்த வைரஸ் தொடர்பாக நேற்று முன்தினம் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு அவசரமாக கூடி விவாதித்தது. அதில், இந்த உருமாறிய வைரசை உலக சுகாதார அமைப்பு வி.ஓ.சி. அதாவது, கவலைக்குரிய பிறழ்வு என்று வகைப்படுத்தி…

மேலும்...

அச்சுறுத்தும் புதுவகை கொரோனா வைரஸ்!

தென் ஆப்பிரிக்கா (26 நவ 2021): உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருந்த நிலையில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் ஏற்கெனவே நாம் அடையாளப்படுத்திய கொரோனா வைரஸ்களை காட்டிலும் வேறுபட்டுள்ளது. சாதாரணமாக கொரோனா வைரஸ்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக பரிணாமமடையக்கூடியதாகும். அந்த வகையில் B.1.1.529…

மேலும்...

சிங்கப்பூரில் சீறிப்பாயும் கொரோனா!

சிங்கப்பூர் (28 அக் 2021): சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) சில மணி நேரங்களிலேயே 5,324 பேரை கொரோனா தாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66…

மேலும்...

சாப்பாடு இல்லை அதிகம் சாப்பிடாதீங்க – அதிபர் திடீர் உத்தரவு!

வடகொரியா (28 அக் 2021): வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல்’ வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது. இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்…

மேலும்...

மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலி!

நைஜீரியா(26 அக் 2021): நைஜீரியாவின் மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள மஷீகு நகரின் மசகுஹா கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதியில் நேற்று காலை முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்குள் புகுந்த துப்பாக்கியேந்த நபர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இவ்விகாரம் அப்பகுதியில்…

மேலும்...

சீனாவை மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்!

உகான் (22 அக் 2021): சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல…

மேலும்...

கத்தரில் சட்டமன்றத் தேர்தல்!

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கத்தரில் சட்டமன்றத்துக்கான 30 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்குரிய தேர்தல் நடைபெற உள்ளது. அமீருக்கான ஆலோசனை குழு-ஷூரா கவுன்ஸில்- என்றிருந்ததை, அரசில் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கத்தர் வரலாற்றில் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், இந்த ஆலோசனை குழுவின் உறுப்பினர்களை அமீரே நேரடியாக தேர்வு செய்வார். தற்போதைய மாற்றப்படி, முன்னர் அமீருக்கு இருந்த அதிகாரம் அப்படியே தொடரும். அதன்படி, 15 உறுப்பினர்களை அமீர்…

மேலும்...

கட்டுக்குள் வந்த கொராணா – கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு எது தெரியுமா?

டோக்கியோ (29 செப் 2021): ஜப்பானில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதோடு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், அங்கு கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. ஜப்பானில் கோவிட் பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் தற்போது பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; கோவிட் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் யோஷிதே சுகா, ‘ஜப்பானில் கோவிட் பரவல் குறைந்துள்ளது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்றால்…

மேலும்...

தலிபானுக்கும் உலகுக்குமிடையிலான பாலமாக கத்தர்!

காபூல்(14/09/2021): தலிபானுக்கும் உலகத்துக்கும் இடையிலான பாலமாக கத்தர் செயல்படும் என தலிபான் கலாச்சாரக்குழு உறுப்பினர் சயீது கூறியுள்ளார். கத்தர் வெளியுறவுதுறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆப்கானிஸ்தான் வந்து பிரதமர் முல்லா முஹம்மது ஹஸன் உட்பட தலிபான் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னாள் பிரதமர் ஹமீத் கர்ஸாயி மற்றும் தேசிய மறு சீரமைப்பு தலைமை குழு தலைவர் அப்துல்லாஹ்வுடனும் தனித்தனியாக சந்திப்பு நடத்தியிருந்தார். உலக நாடுகளுடன் தலிபான்களின் உறவை மேம்படுத்துதல்,…

மேலும்...

ஆப்கன் – பெண்கள் உள்பட விமான நிலையப் பணியாளார்கள் பணிக்குத் திரும்பினர்

காபூல் (14 செப் 2021): ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பெண்கள் உள்பட முன்னாள் பணியாளர்கள் பலரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர். பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தாலிபான் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பணிக்குத் திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணி செய்யும் சுமார் நூறு பெண்களில் ஒருவரான லிடா என்ற பெண் கூறும்போது, “கடந்த மாதம் நாங்கள் சம்பளம் பெறும் நிலையில் இருந்தபோது…

மேலும்...