இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO

Share this News:

புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக் ஆஃப் ஆவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில் தீவிபத்து நிகழ்ந்தது. அதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர், எனினும் விமானத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகே பயணிகள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. என்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply