பள்ளியில் அல்லாமா இக்பால் பாடல் ஒலிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

லக்னோ (23 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அல்லாமா இக்பால் கவிதை வாசிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா மீது”மத உணர்வுகளை புண்படுத்தியதாக” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, காலை மாணவர்கள் ஒன்று கூடியபோது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் “லேப் பே ஆத்தி ஹை துவா” கவிதையை வாசிக்கும் வீடியோ வைரலானது. பள்ளி முதல்வர் நஹித் சித்திக்கையும் இடைநீக்கம் செய்த கல்வித்துறை, சிக்ஷா மித்ரா வசீருதீன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது….

மேலும்...

இந்திய விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் வீரர் சானியா மிர்சா!

லக்னோ (23 டிச 2022): இந்திய விமானப்படையில் போர் விமானி ஆன முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார். உத்திர பிரதேசம் மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சா, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வில் சானியா 149 வது ரேங்குடன் விமானப் படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமையையும் சானியா பெற்றுள்ளார்.சானியா ஏப்ரல் 10ம்…

மேலும்...

இந்தியாவில் புதிய மாறுபாடு கொரோனா பாதிப்பு – விமான நிலையங்களில் மீண்டும் கோவிட் பரிசோதனை!

புதுடெல்லி (21 டிச 2022): சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு தொற்று கண்டுடறியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கோவிட் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது விமான சேவைக்கு எந்த தடையும் இல்லை. இதற்கிடையே சீனாவில் தற்போது பரவி வரும்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடையா?

புதுடெல்லி (21 டிச 2022): உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை…

மேலும்...

மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

தாஜ்மஹாலுக்கு உத்திர பிரதேச அரசு நோட்டீஸ்!

ஆக்ரா (20 டிச 2022): 370 ஆண்டு கால தாஜ்மஹால் வரலாற்றில் முதன்முறையாக கேணி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு நோட்டீஸ் வந்துள்ளது. பல்வேறு பில்களை செலுத்தாததால், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறு என்றும், விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உ.பி…

மேலும்...

பள்ளிக்கூடத்தில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள் – வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவர்கள்!

மசூலிப்பட்டினம் (20 டிச 2022): ஆந்திரா, மசூலிப்பட்டணம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்காள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருப்பவர் ஆனந்த். இவருடன் ஒப்பந்த பெண் ஆசிரியை ஒருவரும் வேலை செய்து வருகிறார். இந்த பள்ளிக்கு, மொத்தமே 2 ஆசிரியர்கள் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருவரும் தனிமையில் இருந்ததை ஒரு…

மேலும்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று ராகுல் காந்தியுடன் இணையும் கமல் ஹாசன்!

சென்னை (19 டிச 2022): கிறிஸ்துமஸ் தினத்தன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய தலைநகரில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் எம்என்எம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்தார். ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்ராவில் ஸ்வரா பாஸ்கர் உட்பட…

மேலும்...

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதி மூன்று குழந்தைகள் படுகாயம் – பரபரப்பு வீடியோ காட்சி!

புதுடெல்லி (18 டிச 2022); டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த கார் குழந்தைகள் மீது மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குலாபி பாக்கில் உள்ள லீலாவதி பள்ளி அருகே இன்று காலை நடைபாதையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது மாருதி ப்ராஸ்ஸா என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர். குழந்தைகளுக்கு பத்து, நான்கு மற்றும் ஆறு வயது ஆகும். இவர்களில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். சம்பவத்தையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோட…

மேலும்...