ஒன்றிய அரசின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்!

புதுடெல்லி (01 ஜன 2022): நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள இலவச உணவு தானிய விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை…

மேலும்...

பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது!

ஜெய்ப்பூர்(30 டிச 2022): – ராஜஸ்தானில் 17 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சர்ஜுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆசிரமங்களின் தலைவரான சர்ஜுதாஸ், ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமியை சர்ஜுதாஸ் துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக சிறுமியின் தாய் மீது ஆசிட் வீச்சு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்திற்கு…

மேலும்...

திரிபுராவில் பாஜகவுக்கு பலத்த அடி!

அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது. இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது எம்.எல்.ஏ. திபச்சந்திரா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த 67 வயதான இவர், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அவர் தலாய் மாவட்டத்தில் உள்ள கரம்சேராவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார். பாஜக…

மேலும்...
ECI

தொலைதூர வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிமுகம்!

புதுடெல்லி (29 டிச 2022): தொழில்நுட்பம் மூலம் தொலைதூர வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் யோசனையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு தேர்தல் நடத்தப்படும் போது வாக்கு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஆணையம் கருதுகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடிந்தால்,…

மேலும்...

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!

நெல்லூர் (29 டிச 2022): ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. கந்துகூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த சோகம் ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு நகருக்கு சந்திரபாபு நாயுடு சென்றடைந்ததும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவே இந்த சோகத்திற்கு வழிவகுத்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்….

மேலும்...

இந்திய மருந்துகளை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சித் தகவல்!

உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காம்பியாவில் குழந்தைகள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் இருந்து இதே போன்ற அறிக்கை வந்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப்பைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மேலும்...

துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10…

மேலும்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது. பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும். கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு…

மேலும்...

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி இறுதிவாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும்!

புதுடெல்லி (28 டிச 2022): கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மூக்‍கு வழியாக செலுத்தப்பபடும் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை தனியார் மருத்துவமனைகளுக்‍கு 800 ரூபாய்க்‍கும், அரசு மருத்துவமனைகளுக்‍கு 325 ரூபாய்க்‍கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூக்‍கு வழியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக்‍ பெற்றுள்ளது. இந்நிலையில், இன்கோவேக் என்ற மூக்‍கு வழி…

மேலும்...