கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதி மூன்று குழந்தைகள் படுகாயம் – பரபரப்பு வீடியோ காட்சி!

புதுடெல்லி (18 டிச 2022); டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த கார் குழந்தைகள் மீது மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குலாபி பாக்கில் உள்ள லீலாவதி பள்ளி அருகே இன்று காலை நடைபாதையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது மாருதி ப்ராஸ்ஸா என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

குழந்தைகளுக்கு பத்து, நான்கு மற்றும் ஆறு வயது ஆகும். இவர்களில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளார்.

சம்பவத்தையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோட முயன்ற போதும் டயர் வெடித்ததால் தப்பிச் செல்ல முடியவில்லை. அப்போது டிரைவருடன் காரில் இருந்த 2 பேரையும் அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டபோது விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு, காரை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply