காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுக்கு ஊடகங்கள் உதவுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர் (16 டிச 2022): பாஜகவை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வீழ்த்தும் என்று ராகுல் காந்தி கூறினார். பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் சர்வாதிகாரிகளின் கட்சி அல்ல. வட மாநிலங்களில் பாரத் ஜோடோ யாத்ரா வெற்றியடையாது என்று சிலர் கூறியதாகவும் ஆனால் மக்கள் ஆதரவுடன் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும்…

மேலும்...

பெண் காவலர்கள் நடனமாடியதால் பணியிடை நீக்கம் – வீடியோ!

அயோத்தி (16 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் காவலர்கள் பேஜ்பூரி பாடலுக்கு நடனமாடியதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடன வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டது. 4 பேர் அதிகாரப்பூர்வமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கான்ஸ்டபிள்கள் கவிதா படேல், காமினி குஷ்வாஹா, காஷிஷ் சாஹ்னி மற்றும் சந்தியா சிங் ஆகியோர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் நடனமாடியுள்ளனர். இதனை அடுத்து இவர்களை…

மேலும்...

100 வது நாளை எட்டியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை!

ஜெய்பூர் (16 டிச 2022): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. இன்று ராஜஸ்தானில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்போம் என்ற முழக்கத்தை ராகுல் காந்தியின் நடைப்பயணம் எழுப்பி வருகிறது. ஏழு மாநிலங்களுக்குப் பிறகு, எட்டாவது மாநிலமான ராஜஸ்தானில் யாத்திரை பயணம் தொடர்கிறது. 2798 கி.மீ. தூரம் கொன்ட இந்த பயணம் ஜனவரி 26ம் தேதி ஸ்ரீநகரில்…

மேலும்...

ரீல்ஸ் மோகம் – மூவர் பலி!

காஜியாபாத் (15 டிச 2022): உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரயில் தண்டவாளம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டனர். உ.பியைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சமூக வலைத் தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக ஒரு த்ரில் வீடியோவை உருவாக்கும் ஆவல் ஏற்பட்டது. இதனால் ரயில் அருகே வரும்வரை காத்திருந்து ரயிலுக்கு நெருக்கமாக நின்று வீடியோ எடுத்தனர். ஆனால், ரயில்…

மேலும்...
Supreme court of India

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதி ஜாமீனில் விடுதலை!

அஹமதாபாத் (15 டிச 2022): 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஃபாரூக்கிற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது, அவர் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். ஃபரூக்கின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை உள்ள காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது…

மேலும்...

பாஜக முன்னாள் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

ஹரித்வார்(14 டிச 2022): : உத்தர்காண்ட் முன்னாள் பாஜக தலைவரும், அங்கிதா கொலை வழக்கில் சந்தேக நபருமான புல்கித்தின் தந்தை வினோத் ஆர்யா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வினோத் ஆர்யாவின் கார் டிரைவர், வினோத் ஆர்யா தன்னை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து ஆடைகளை அவிழ்க்கச் சொன்னதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் ஆர்யா தன்னை அடித்து மிரட்டியதாக டிரைவரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் டிரைவரின்…

மேலும்...

பாஜகவுக்கு தைரியம் இல்லை; உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (14 டிச 2022): : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசிடம் இனி கெஞ்சப்போவதில்லை என முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். பஹல்காமில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காஷ்மீரில் தேர்தலை நடத்த பாஜக பயப்படுவதாகவும் கூறினார். மத்திய அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் தேசிய மாநாடு தயாராக உள்ளது. ஆனால்…

மேலும்...

12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு – VIDEO

புதுடெல்லி (14 டிச 2022): டெல்லி துவாரகாவில் 12ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கில் வந்த இருவர் மாணவியின் முகத்தில் ஆசிட் வீசினர். பலத்த காயமடைந்த மாணவி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ஜார்கண்ட் (14 டிச 2022): ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 8 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக, சிறுமியை அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த வாரம் படாம்டா தொகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குற்ற செயலில்…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு!

புதுடெல்லி (13 டிச 2022): குஜராத்தில் தன்னை வன்புணர்ந்து சீரழித்து, தன் குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்த 11 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானுவால் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். 2002 குஜராத் கலவரத்தின் போது 2000த்திற்கு அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு…

மேலும்...