வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்து சட்ட அமைச்சர் பதில்!

புதுடெல்லி (18 டிச 2022): ஆதார் அட்டை தற்போது நாட்டின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை கட்டாயம். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இணைக்கப்படவில்லை என்றால் பான் கார்டு ரத்து செய்யப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு குடிமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் வசதியை தேர்தல் ஆணைய இணையதளம் வழங்கியுள்ளது….

மேலும்...

ஷாஜியா மாரி இந்தியாவுக்கு மிரட்டல்!

இஸ்லாமாபாத் (18 டிச 2022): பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஷாசியா மாரி இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. “பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தேவை ஏற்பட்டால், திரும்பிப் பார்க்காமல் செயல்படுவோம்’ என்று ஷாஜியா தெரிவித்துள்ளார். அதே…

மேலும்...

நடராஜ் பென்சில் குறித்த விளம்பரம் – உண்மை தன்மை என்ன?

சமூக வலைதளங்களில் நடராஜ் பென்சில்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான சம்பளம் என்ற வேலை விளம்பரம் ஒன்று பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்வோம். சமூக வலைதளங்கள் மூலம் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலை மோசடி இது. நடராஜ் பென்சில்களை பேக்கிங் செய்யும் வேலைக்கு மாதம் 30000 ரூபாய்க்கு மேல் என்பதாக விளம்பரங்கள் வருகின்றன. இது போலி விளம்பரமாகும். இந்த போலி விளம்பரங்களில் முதலாளிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண்கள் உள்ளன. வீட்டில் செய்யக்கூடிய எளிய வேலை…

மேலும்...

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு; மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

புதுடெல்லி (17 டிச 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மஹராஷ்டிராவில் நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பில்கிஸ் பானுவின் வாதம். இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும்…

மேலும்...

முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

அஹமதாபாத் (17 டிச 2022): குஜராத்தில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் நூர் முகமது வோரா தனது 22 வயது மனைவிக்கு உடனடி தலாக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சலீம் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ்…

மேலும்...

மேற்கு மத்திய ரயில்வேயில் காலியிடங்கள் – இப்போதே விண்ணப்பிக்கவும்!

புதுடெல்லி (17 டிச 2022): சமீபத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு. , தச்சர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர், பிளம்பர், பிளாக்ஸ்மித், வெல்டர் போன்ற ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். மொத்தம் 2,521 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55%…

மேலும்...

பீகார் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அரச கொலை என்று சிராக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பீகாரில் கள்ள சாராய பேரழிவு தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்று முதல்வர் நிதிஷ்குமார்…

மேலும்...

காவி உடை அணிந்து மிஸ் இந்தியா போட்டியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி – பரபரப்பை கிளப்பும் வீடியோ!

கொல்கத்தா (17 டிச 2022): காவி உடையில் ஸ்மிரிதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கும் வீடியோவை வெளியிட்டு, ஷாருக்கான் படம் தொடர்பான சர்ச்சையில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரிஜு தத்தா, ‘தீபிகா காவி அணிந்தால் பிரச்சனை, ஸ்மிருதி இரானி அணிந்தால் பிரச்சனை இல்லையா?’ என வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி காவி உடை அணிந்து மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார். 1998 ஆம்…

மேலும்...

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரண் மாவட்டத்தின் மர்ஹௌரா துணைப்பிரிவின் மஸ்ராக் தொகுதியில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மது அருந்தி தீவிர நோய்வாய்ப்பட்டு கண்பார்வையை இழந்தவர்கள் குறித்தும் செய்திகள் வருகின்றன. 22 பேர் பல்வேறு…

மேலும்...

மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது!

இந்தூர் (17 டிச 2022): மத்திய பிரதேசம் இந்தூரில் மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆட்டோ ரிக்‌ஷாவில் கண்டெடுக்கப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சியா என்பதை சரிபார்க்க ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்வதற்கு முன் காவல் நிலையத்திற்கு வந்த பாஜகவினர் ஆட்டோ ரிக்‌ஷா உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மேலும்...