19 வயது முஸ்லீம் வாலிபர் படுகொலை -4 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

கடக் (19 ஜன 2022): கர்நாடகாவில் 19 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் நர்குண்டு நகரில் சமீர் மற்றும் ஷம்சீர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு 7:30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களது வாகனத்தை மறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்….

மேலும்...

பாஜக சார்பில் 20 முஸ்லிம் வேட்பாளர்கள் – சூடுபிடிக்கும் உ.பி தேர்தல் களம்!

லக்னோ (11 ஜன 2022): உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களையாவது நிறுத்த வேண்டும் என்று பாஜக மத்திய தலைமையிடம் சிறுபான்மை மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது. 2017 தேர்தலில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. “முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் இருக்கும் பல தொகுதிகள் உள்ளன. பல இடங்களில் நாங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். சம்பல், மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,” என்று…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக இணையத்தில் பரவும் தவறான தகவல்!

புதுடெல்லி (28 டிச 2021): ‘இந்து எதிர்ப்புப் பாடல் ஒன்று இசுலாமியர்களால் இயற்றப்பட்டது’ என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான காட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல முஸ்லிம்களுக்கு எதிரான போலியான தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு “இந்து விரோத உணர்வைத் தூண்டுவதற்காக முஸ்லீம்களால் இயற்றப்பட்டது” என்ற கூற்றுடன் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பாடலின் இசையமைப்பாளர் ஒரு இந்து என்றும்…

மேலும்...

முஸ்லிம்களை படுகொலை செய்யுங்கள் – அதிர்ச்சி அடைய செய்யும் இந்துத்வா அமைப்பினரின் மாநாடு!

புதுடெல்லி (25 டிச 2021): முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும் என்று உத்தர்காண்டில் நடைபெற்ற இந்துத்துவா மாநாட்டில் பிரகடனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவ மாநாடு நடந்தேறியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்றது. விழாவில் பேசிய தலைவர்கள்…

மேலும்...

முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் . ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப்…

மேலும்...

முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மத்திற்கு மாறினார்!

லக்னோ (06 நவ 2021): உத்திர பிரதேச முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாறினார் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி சுவாமி யதி நரசிங்கானந்த் என்பவரால் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டார். மத மாற்றத்திற்குப் பிறகு ரிஸ்வியின் புதிய பெயர் ஜிதேந்திர நாராயண் சிங் என்று மாற்றிக்கொண்டார். முன்னர், இவர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

முஸ்லீம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக ஆலோசனை!

புதுடெல்லி (24 அக் 2021): ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி முஸ்லிம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னால் உள்ள அரசியல் வியூகம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை எப்படி அணுகுவது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர், அனைத்து…

மேலும்...

மதமாற்ற நாடகமாடிய பாஜக – சிக்கலில் போலீஸ்!

அலிகார் (30 செப் 2201): உத்தர பிரதேச மாநில அலிகார் நகரில், ஒரு முஸ்லீம் இளைஞர் இந்துவை மதம் மாற்றுவதாக விடியோ வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை அறியாமல் நடவடிக்கை எடுத்து உ.பி போலீஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. வைரலான இந்த வீடியோவை, பாஜகவினர் அலிகார் போஸிஸிடம் காண்பித்து புகார் அளிக்க. உடனே, செயல்பட்ட போலீஸ மதமாற்றம் செய்தவர் மீது மட்டுமின்றி… மதம் மாறியவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத கடுமையான சட்டப்படி இருவர் மீதும்…

மேலும்...

பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…

மேலும்...

கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார். அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம்…

மேலும்...