காஷ்மீரில் பண்டிட்டுகளைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் – சஜாத் லோன்!

புதுடெல்லி (23 மார்ச் 2022): 1990களில் பண்டிட்களை விட காஷ்மீரி முஸ்லிம்கள் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டின் தலைவர் சஜாத் லோன் கூறியுள்ளார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள லோன், படம் ஒரு கற்பனைப் படைப்பு. என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்,”காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீரி முஸ்லிம்கள் பண்டிட்களை விட 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டாக்களால் என் தந்தையை…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

கோவில் கட்டுவதற்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய முஸ்லிம்கள்!

பாட்னா (22 மார்ச் 2022): பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண மந்திர் கட்டுவதற்காக 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது. திங்களன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், “குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் எங்களுக்கு கோவில் கட்ட…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை!

அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு…

மேலும்...

முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு – ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு தகவல்!

புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதா 2021ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா…

மேலும்...

கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷிமோகா பகுதியில் பல…

மேலும்...

50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!

கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில்…

மேலும்...

காவல்துறை காவலில் 18 வயது முஸ்லீம் சிறுவன் மர்ம மரணம்!

புதுடெல்லி (19 பிப் 2022): டெல்லியில் காவல்துறை காவலில் இருந்த 18 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பழுதுபார்ப்பவராக இருந்த 18 வயது சிறுவன் ஜீஷன் மாலிக் ப்ரீத், விஹாரின் குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 20, 2021 அன்று சிகரெட் பாக்கெட்டைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை காவலில் மாலிக் உயிரிழந்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுவன் ஜீஷன் மாலிக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக…

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...