கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

Share this News:

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார்.

அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம் பெயரில் பொறிக்கப்பட்ட தகடு கோவிலுக்குள் இருப்பதா? என்று கேட்டு அந்தத் தகடை அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் தகடை சேதப் படுத்தியவர்கள் மீது கோயில் குழு போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத் தலைவர் சத்யபால் சிங் அளித்த புகாரில், “பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த சமூக விரோதிகள் குழு ஒன்று கோவிலுக்குள் புகுந்து முஸ்லீம் பெயர் பொறித்த தகடை அடித்து நொறுக்கியது. எனவே வரம்பு மீறி கோவிலுக்குள் நுழைந்து மத துவேஷத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பஜ்ரங் தள செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.” என்று கோரியிருந்தார்.

இதனை அடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் தெரிவிக்கையில், “அலிகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும்  மசூதிகளில் நல்லெண்ண அடிப்படையில 100 வாட்டர் கூலர்களை நிறுவ முடிவு செய்து அதனைச் செயல் படுத்தி வருகிறேன்.

மதவெறி தலைக்கேறிய ஒரு அமைப்பினர், இதற்கும் ஒரு இனவாத நிறத்தை பூசுவது அதிர்ச்சி அளிக்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply