முஸ்லீம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக ஆலோசனை!

Share this News:

புதுடெல்லி (24 அக் 2021): ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி முஸ்லிம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னால் உள்ள அரசியல் வியூகம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை எப்படி அணுகுவது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர், அனைத்து தேசிய அலுவலக ஊழியர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை மாநிலங்களின் மாநில பொறுப்பாளர்கள், மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் டி.புரந்தேஸ்வரி, பாஜக சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Share this News:

Leave a Reply