மதமாற்ற நாடகமாடிய பாஜக – சிக்கலில் போலீஸ்!

Share this News:

அலிகார் (30 செப் 2201): உத்தர பிரதேச மாநில அலிகார் நகரில், ஒரு முஸ்லீம் இளைஞர் இந்துவை மதம் மாற்றுவதாக விடியோ வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை அறியாமல் நடவடிக்கை எடுத்து உ.பி போலீஸ் சிக்கலில் சிக்கியுள்ளது.

வைரலான இந்த வீடியோவை, பாஜகவினர் அலிகார் போஸிஸிடம் காண்பித்து புகார் அளிக்க. உடனே, செயல்பட்ட போலீஸ மதமாற்றம் செய்தவர் மீது மட்டுமின்றி… மதம் மாறியவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத கடுமையான சட்டப்படி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தது.

இதில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் இருவரும் இந்துக்கள் என்பதும், இருவரும் மதமாற்ற நடகமாடியதும் தெரிய வந்தது

பொது சமூகத்தில்… முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்க அல்லது ஊக்குவிக்க வேண்டி… முஸ்லீம் போல வேஷம் போட்டு நடித்து, அவர்கள் செய்த ‘மதமாற்ற நாடகம்’தான் அந்த வைரல் வீடியோ… என்கிற உண்மை… விசாரணையில் அம்பலம் ஆகியது

அதுமட்டுமின்றி… அவ்விருவரும் 18வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்கள் & பாஜகவினர். ஆகவே, அவர்களை மேற்படி 505 சட்டப்படி கைது செய்ய முடியவில்லை. எனவே… இனி என்ன செய்வது என்று மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளது உ.பி.போலீஸ்.


Share this News:

Leave a Reply