இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (10 ஜூலை 2021): இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...

கத்தாரில் மேலும் தளர்த்தப்படும் சில கோவிட் கட்டுப்பாடுகள்!

தோஹா (08 ஜூலை 2021): கத்தாரில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் தோஹா மெட்ரோ ஆகியவற்றிற்கு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும். அதேபோல பொது இடங்களில் பதினைந்து பேர் வரை கூடலாம். தனியார் சுகாதார நிலையங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும்...

அமைச்சரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட எல் முருகன்!

சென்னை (06 ஜூலை 2021): தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக கேட்ட எல் முருகனுக்கு வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எல்,முருகன், “தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர் திடீர் மரணம்!

மதுரை (04 ஜூலை 2021): மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டு கண்காணிப்பில் இருந்தபோது எந்த உடல் உபாதைகளும் ஏற்படாததால், ஆண்ட்ரூ சைமன் வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர்,…

மேலும்...

கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம்!

துபாய் (04 ஜூலை 2021); உலகிலேயே அதிக சதவீதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்க் தடுப்பூசி டிராக்கர் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி , வெளிநாட்டவர்கள் உட்பட 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், இரண்டு டோஸ் தடுப்பூசியை 72.1 சதவீத மக்களுக்கு விநியோகித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி கோவிட் விகிதம் . பிப்ரவரியில் இது 4,000 ஆக இருந்தது. மார்ச் முதல்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாட்டுக்கே ஆபத்து!

மாஸ்கோ (04 ஜூலை 2021): உலகில் கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாடு ரஷ்யா. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக்’ பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

கோவிட் காலத்தில் சவுதிக்கு செல்ல முயலும் இந்தியர்களை சிக்கலில் சிக்க வைக்கும் முகவர்கள்!

புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது….

மேலும்...

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா மூன்றாவது அலை பரவினால், அது கொரோனாவின் முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும். அல்லது அதைவிட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒன்றிய அரசின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது. கான்பூர் ஐஐடி அகர்வால், ஹைதராபாத் ஐ.ஐ.டி . கனித் கார், வித்யாசாகர் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மூன்றாவது அலையானது நோய்…

மேலும்...