மதங்களை கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த தமுமுக!

சென்னை (28 ஜூன் 2021); மதங்களைக் கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக் கணக்கான உடல்களை அடக்கம் செய்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொண்டர்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில்,  இந்தியா மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தின் காரணமாக  உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இறந்தோரின்…

மேலும்...

அதி வேகமாக பரவும் டெல்டா பிளஸ் வைரஸ் – என்ன செய்ய வேண்டும்? : WHO விளக்கம்

ஜெனிவா (28 ஜூன் 2021): இந்தியாவில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸாக உருவெடுத்தது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கெப்ரேயசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85…

மேலும்...

பரவும் டெல்டா பிளஸ் – தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ், புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறியத் தேவையான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒன்றிய அரசு…

மேலும்...

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைப்பது எப்படி?

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கவிருப்பதாகவும், அதற்கான பணிகளில் விமான போக்குவரத்து ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழில் தங்களது…

மேலும்...

திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா – கடும் ஊரடங்கு அறிவிப்பு!

டாக்கா (26 ஜூன் 2021): இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை…

மேலும்...

சென்னை நர்ஸுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று!

சென்னை (24 ஜூன் 2021): சென்னையில் ‘டெல்டா பிளஸ்’ தொற்றால் நர்ஸ் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. பெங்களூரு வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 1,159 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 554 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சென்னையை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு இருந்தது…

மேலும்...

சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப்…

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவிட் மரணத்தை தவிர்க்கலாம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதமும் கோவிட் இறப்புகளை தவிர்க்கலாம் என்று ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே…

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு திடீர் நிறுத்தம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): பயணத் தடை தொடர்பான தெளிவான அறிப்பு இல்லாததால், விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெறுவதுடன், பயணம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் ஆன சான்றிதழை வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் இன்று முதல் துபாய் செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ஆனால் விமான சேவை இன்று தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த பெரிய…

மேலும்...