கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம்!

Share this News:

துபாய் (04 ஜூலை 2021); உலகிலேயே அதிக சதவீதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது.

ப்ளூம்பெர்க் தடுப்பூசி டிராக்கர் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி , வெளிநாட்டவர்கள் உட்பட 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், இரண்டு டோஸ் தடுப்பூசியை 72.1 சதவீத மக்களுக்கு விநியோகித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி கோவிட் விகிதம் . பிப்ரவரியில் இது 4,000 ஆக இருந்தது. மார்ச் முதல் 2,000 வரை என குறைந்துள்ளது. அதேபோல உலகிலேயே மிகக் குறைந்த விகிதத்தில் கொரோனா இறப்பை கொண்ட நாடும் ஐக்கிய அரபு அமீரகமே.


Share this News:

Leave a Reply