முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி கருத்து!

புதுடெல்லி (17 மே 2020): கொரோனாவை பாஜக அரசால் கட்டுப்படுத்த முடியாது, எனவே பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக…

மேலும்...

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை(17 மே 2020): தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து…

மேலும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தியின் மனிதாபிமானமிக்க செயல்!

லக்னோ (17 மே 2020): , காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தியின் ஏற்பாட்டின் பேரில், 500 பேருந்துள் மூலம் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்த லாரி, நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 பேர் பலியாகினர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில்…

மேலும்...

1 முதல் 12 வகுப்பு வரை ஆன்லைன் கல்விக்கு புதிய சேனல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர்,…

மேலும்...

புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் மன்னிக்க முடியாத குற்றம் – தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி வேதனை!

புதுடெல்லி (16 மே 2020): புலம்பெயர் தொழிலாளர்களின் வலிகளும் உயிரிழப்புகளும் மன்னிக்க முடியாத குற்றம் என்று தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு 1,125 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக நன்கொடை வழங்கியவர்களில் மூன்றாவது இடம் பிடித்தவரானார். இந்நிலையில் எகனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும்…

மேலும்...

டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் சென்னை புறப்பாடு!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும்…

மேலும்...

கொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன? – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம் (வீடியோ)

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சில, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அதேவேளை அரசு பள்ளிகளின் நிலை குறித்து அவள் விகடன் விருது பெற்றவரும், சமூக சேவகியும் ஆசிரியையுமான மகாலட்சுமி அவர்கள் தமிழ் ஊடகப் பேரவைக்கு அளித்த நேர்காணல். பேட்டியாளர் யூசுப் ரியாஸ் நன்றி: தமிழ் ஊடகப் பேரவை

மேலும்...

வெளிநாட்டு விமானங்களுக்கு சென்னைக்கு பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு!

சென்னை (16 மே 2020): “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் தமிழகம் வரும் விமானங்கள், சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தமிழகம் வரவிருப்பதால் இனி, சென்னைக்குப் பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 11 விமானங்கள்…

மேலும்...

கொரோனா நன்கொடையாளர்களில் இந்தியாவின் அஜீம் பிரேம்ஜி உலக அளவில் மூன்றாமிடம்!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா நன்கொடை வழங்கியதில் இந்தியாவின் தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஊடகம் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நன்கு அறியப்பட்ட தொழிலதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட நண்கொடை வழங்கிய மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட முதல் 10 நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் அஜீம் பிரேம்ஜி…

மேலும்...

முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜக எம்பி!

புதுடெல்லி (16 மே 2020): கிழக்கு டெல்லியில் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா, முஸ்லிம்கள் சாலையில் தொழுகை நடத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு டெல்லி போலிசிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பர்வேஸ் வர்மாவின் பதிவில், “ஊரடங்கு நேரத்தில் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். இதற்கு அனுமதி அளிக்கிறதா போலீஸ்?” என்று அவர் பதிவிட்டிருந்தார். மேலும் பதிவில் ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். இதற்கு பதிலளித்த…

மேலும்...