தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (20 மே 2020): தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறக்‍கப்பட்டவுடன் தேர்வை நடத்தப்போவதாக அறிவித்திருக்‍கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பள்ளிகளுக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு…

மேலும்...

ராகுல் காந்தி மீது பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவில் (20 மே 2020): ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்படுகிறார் என்று முன்னாள் மத்திய இணை அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “வெள்ளாடிச்சிவிளை பகுதி தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். பள்ளிகள்…

மேலும்...

துப்பாக்கி ஏந்தும் கையில் மதுபாட்டில்கள் – அரசு வாகனத்தில் படு அமர்க்களம்!

ராணிப்பேட்டை (20 மே 2020): ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இன்று காலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு வந்தது. மதுப் பிரியர்கள் காலையிலே வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக்கொண்டு தேவையான சரக்குகளை வாங்கி கைகளிலும் இடுப்பிலும் பாக்கெட்களில் கோணிப்பை போன்றவற்றில் வாங்கி மறைத்து எடுத்துச் சென்றனர் தக்கோலம் டாஸ்மாக் கடையில் போதுமான மதுபானங்கள் இருந்தமையால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர் இந்நிலையில் அப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை…

மேலும்...

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்!

வாஷிங்டன் (20 மே 2020): அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக் குழு தலைவராக முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் (கோவிட் 19) உலக அளவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் அமெரிக்காவே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ!

புதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா…

மேலும்...

நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு!

சென்னை (19 மே 2020): பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர்…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் – ரெயில்வே அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (19 மே 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நான்காம் முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள்…

மேலும்...

பாஜகவின் ஆபாச அணுகுமுறை எதிரொலி – கரூர் எம்பி ஜோதிமணி அதிரடி முடிவு!

சென்னை (19 மே 2020): தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக கரு நாகராஜன் தரக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக பாஜக கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக…

மேலும்...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு – புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை (19 மே 2020): தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு…

மேலும்...

ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நொய்டா (18 மே 2020): ஜீ மீடியா சேனல் பணியாளர்கள் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த சேனல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக அலவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான ஜீ மீடியாவையும் அது விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சுதிர் சவுத்ரி தெரிவிக்கையில், ” எங்கள் ஊழியர்களில் ஒருவர்…

மேலும்...