முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜக எம்பி!

புதுடெல்லி (16 மே 2020): கிழக்கு டெல்லியில் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா, முஸ்லிம்கள் சாலையில் தொழுகை நடத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு டெல்லி போலிசிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பர்வேஸ் வர்மாவின் பதிவில், “ஊரடங்கு நேரத்தில் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். இதற்கு அனுமதி அளிக்கிறதா போலீஸ்?” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் பதிவில் ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி, “இது முற்றிலும் தவறானது. வதந்தியைப் பரப்புவதற்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பாஜக எம்.பி பழைய வீடியோவை பயன்படுத்தியுள்ளார்.

இதுபோன்று பரப்புவதற்கு முன் சரிபார்த்துப் பதிவிட வேண்டும்” என்று கிழக்கு போலீஸ் டிசிபி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

காவல்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து, சமூகத்தில் பாஜக குழப்பம் ஏற்படுத்திய இரண்டு ட்வீட்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

Fake News பரப்பி குழப்பம் ஏற்படுத்திய பாஜக எம்.பி கைது செய்யப்பட்டாரா அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்ற தகவல் ஏதும் இல்லை.

இச்செய்தியைப் பகிருங்கள்: