கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 85,940 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 85 ஆயிரத்து 940 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 753-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 ஆயிரத்து 258 பேர் குணம‌‌டைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 29 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்….

மேலும்...

அரசின் மெத்தனம் – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தொடர் மரணம் – இன்றும் நேர்ந்த கொடூரம்!

லக்னோ (16 மே 2020): அரசின் மெத்தனத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காமல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறபோதும், கட்டணம் ஏழை…

மேலும்...

கொரோனா ஆரூடம் கூறிய நிதி அயோக் அமைப்பினர் பெரிய மேதைகள் – ராகுல் காந்தி கிண்டல்!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா பற்றி சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது நிதி ஆயோக்‍ அமைப்பு. “தேசிய ஊரடங்கு நடவடிக்கையால், இந்தியாவில் மே 16 ஆம் தேதி முதல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இருக்‍காது!” என கணிப்பு வெளியிட்ட நிதி ஆயோக்‍ அமைப்பை திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேசிய ஊரடங்கை அமல்…

மேலும்...

புறக்கணிக்கப்படும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் – திருமாவளவன் பதில்!

சென்னை (15 மே 2020): வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு ‘வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம்’ அமைக்க அரசிடம் வலியுறுத்தப்படும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். ஜும் செயலி வழியாக பல்வேறு நாட்டினை சேர்ந்த தமிழ்மக்கள் திருமாவளவனுடன் உரையாற்றினார்கள். அதில் குறிப்பாக, கொரோனா காலத்தில் வேலை இழந்து ஊருக்கு செல்ல எத்தனித்துள்ள தமிழர்களை அழைத்துக் கொள்வதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதையும் மற்ற மாநிலங்கள்…

மேலும்...

குழப்படியான கணக்கு – மத்திய அமைச்சர்கள் மீது ப.சிதம்பரம் சாடல்!

சென்னை (15 மே 2020): மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் கூறியுள்ளார். ‘ இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது “நிதின் கட்கரி ஒரு பேட்டியில், ‘அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, 5 லட்சம் கோடி ரூபாயை செலுத்தாமல், நிலுவை வைத்துள்ளன’ என, கூறியுள்ளார். ஆனால், நிதியமைச்சர், நிர்மலா சீதராமன்,…

மேலும்...

நடிகர் ராதாரவிக்கு கொரோனா? – குடும்பத்தர் தனிமைப்படுத்தல்!

சென்னை (15 மே 2020): நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான ராதாரவி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது கொரோனாவால் இந்தியா முழுக்க ஊரடங்கு நிலவி வருகிறது. மக்கள் யாரும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய முடியாத நிலையுள்ளது. மிக முக்கிய காரணங்களுக்காக மட்டும் உரிய அனுமதி தரப்படுகிறது. இந்நிலையில் ராதா ரவி கடந்த 10 ம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி கோத்தகிரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர் மார்வளா சாலையும் இள்ள சொகுசு…

மேலும்...

டாஸ்மாக் – செம்மையாக ஏமாந்த குடிகாரர்கள்!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று குடிகாரர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று…

மேலும்...

டாஸ்மாக்கை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – கமல் அதிரடி கருத்து!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக்கை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் கமல் கருத்து தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச…

மேலும்...

டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் – உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (15 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தஹி வாதிட்டார். ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...