சவூதியிலிருந்து விடுமுறையில் இந்தியா சென்றவர்களுக்கு நற்செய்தி!

Share this News:

ரியாத் (24 ஆக 2021): சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள், மூன்றாம் நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்தனர்.

ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்திய குடிமக்கள் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்ததில் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. இதன் மூலம் மூன்றாவது நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு அவசியமில்லை. ” என்று அந்த ட்விட்டர் பதிவில் கூறப்படுள்ளது.

மேலும் விவரங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரண்டு தடுப்பூசி பெற்ற பின்னரும் சவூதி திரும்ப முடியாமல், மூன்றாவது நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.


Share this News:

Leave a Reply