குஷ்பூ விலக காரணம் ஏன்? – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, “குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்… ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்… நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர்…

மேலும்...

பாஜகவில் இணையும் நடிகை குஷ்பூ?

சென்னை (12 அக் 2020): காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டும், உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இதன்பின்னர், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும்…

மேலும்...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது…

மேலும்...

பாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்!

புதுடெல்லி (26 செப் 2020): பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவராக கேரளாவை சேர்ந்த அப்துல்லா குட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய அளவிலான புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது. பாஜக முதல் முறையாக 12 தேசிய துணைத் தலைவர்களை நியமித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது….

மேலும்...

பாஜகவுக்கு சவால் விடும் அமைச்சர் ஜெயகுமார் – சிறப்பு நேர்காணல்!

சென்னை (24 செப் 2020): அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல்: கே. மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விவசாயிகளுக்கான சட்டங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. இதனை அதிமுக ஆதரிக்ககாரணம் என்ன? ப. இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலேயே நாங்கள் ஏன் ஆதரித்தோம் என்பதற்கான காரணங்கள் இருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன…

மேலும்...

விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு!

புதுடெல்லி (16 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது….

மேலும்...

திமுகவுக்கு பாஜக திடீர் பாராட்டு – இதுதான் காரணமா?

சென்னை (10 செப் 2020): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கார்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அசைத்துப்பார்த்துள்ளது. ஏனென்றால் தேசிய கட்சிகள் கூட இந்த அளவில் தொழில்நுட்ப பொதுக்குழுவை கூட்டியதில்லை. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன?

கொல்கத்தா (04 செப் 2020): பாஜகவின் மேற்கு வங்க துணை செயலாளரான அர்ஜூன் சிங் செப்டம்பர் 1 அன்று ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் அவர் ; தீதியின் (மம்தா பானர்ஜி) அரசியலின் ஜிஹாதி இயல்பு, இப்போது இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் அழிப்பதில் நரகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் ஒரு மதக் குழு ஒரு கோவிலைத் தாக்கி அழித்து மா காலியின் சிலையை எவ்வாறு எரித்தது என்பதைப் பாருங்கள். என்று எரிந்த நிலையிலுள்ள…

மேலும்...

தொடர் வெறுப்புப் பிரச்சாரம் – பாஜக எம்.எல்.ஏவின் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்!

புதுடெல்லி (03 செப் 2020): பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அதேபோல பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலதரப்பிலிருந்தும் புகார் எழுந்து வருகிறது…

மேலும்...