மேற்கு வங்க அரசியலில் தன் சித்து வேலையை தொடங்கிய பாஜக – திரிணாமுல் காங்கிரஸில் விரிசல்!

கொல்கத்தா (17 டிச 2020): திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுவேந்து ஆதிகாரி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்னர் சுவேந்து ஆதிகாரி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாம் செய்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுவேந்து ஆதிகாரி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், புருலியா, பாங்குரா மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளராகவும் , மேலும் அந்த…

மேலும்...

சங் பரிவாருக்கு விடை கொடுத்த மோச்சி – இன்று டெல்லியில் விவசாயிகளுடன் போராட்டம்!

புதுடெல்லி (16 டிச 2020): அன்று சங் பரிவருக்காக கொடியை ஏந்தி குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட அசோக் மோச்சி, இன்று சிவப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் குஜராத் இனப்படுகொலையின் முக்கிய நபராக அசோக் மோச்சியை சங் பரிவார் பயன்படுத்திக் கொண்டது. தன்னை இனப்படுகொலையின் ஒரு பகுதியாக ஆக்குவது உட்பட சங்க பரிவாரின் அனைத்து அட்டூழியங்களையும் அசோக் மோச்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பாஜகவிடமிருந்து விடை பெற்ற அசோக் மோச்சி,பல இடங்களில் சங்க பரிவருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து…

மேலும்...

பாஜகவில் குஷ்பு புறக்கணிப்பு!

சென்னை (14 டிச 2020): பாஜகவில் குஷ்பு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பல கட்சிகளில் இருந்து விட்டு கடைசியாக காங்கிரஸிலிருந்து பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை குஷ்பு, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சியில் இணைந்தார். ஆனால் இதுவரை அவரை அக்கட்சியினர் ஒருவர் கூட மதித்ததாக தெரியவில்லை. திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் அவர் பேசிய வீடியோ சினிமாவில் நடிப்பதுபோல் டேக் கட் சொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கேலிக்கு ஆளானார். இது இப்படியிருக்க தமிழக சட்டமன்ற…

மேலும்...

பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் இனரீதியிலான நச்சுக் கருத்து!

போபால் (14 டிச 2020): பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் மீண்டும் இனரீதியான அவதூறுகளை பரப்பி சர்ச்சசையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபாலில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், சூத்ராவை த்ராவை சூத்ரா என்று அழைப்பது எப்படி தவறாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நாங்கள் சத்ரியரை சத்திரியர் என்றே அழைக்கிறோம், அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிராமணரை ஒரு பிராமணர் என்று அழைப்போம் , அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள…

மேலும்...

பாஜக மம்தாவை கொலை செய்ய முயற்சி – அமைச்சர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார். கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக…

மேலும்...

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் கிடுக்கிப்பிடி – தோல்வியில் முடிந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது.. விதிகளை ரத்து செய்யாமல் எந்த விவாதமும் இருக்காது என்று விவசாயிகள் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். விதிகளை வாபஸ் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக விவசாயிகள் தெளிவுபடுத்தியிருந்தனர். அதே நேரத்தில், சட்டங்களை ரத்து செய்வது…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார் பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு…

மேலும்...

நிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்!

பாட்னா (17 நவ 2020): நடைபெற்ற பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கூட்டனியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், பிகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இன்று அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சியை உறவாடி அழித்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது….

மேலும்...

பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ…

மேலும்...

பீகார் அமைச்சரவையை பிரிப்பதில் குழப்பம் – நிதிஷ் குமாருக்கு பாஜக நெருக்கடி!

பாட்னா (14 நவ 2020): பீகாரில், என்.டி.ஏ ஆட்சியமைக்கும் நிலையில் துறைகளைப் பிரிப்பதில் பாஜக தொடர்ந்து தகராறு செய்து வருகிறது. பிகாரில் நிதிஷ்குமார் கட்சி குறைவான இடங்களை பிடித்த போதும் அவரே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் யார் என்று பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. என்டிஏ நாளை நடத்தும் கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வார் என்பது தெரியவந்துள்ளது. துணை முதல்வர் மட்டுமல்லாமல் உள்துறை, நிதி மற்றும் கல்வித் துறைகள்…

மேலும்...