சங் பரிவாருக்கு விடை கொடுத்த மோச்சி – இன்று டெல்லியில் விவசாயிகளுடன் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (16 டிச 2020): அன்று சங் பரிவருக்காக கொடியை ஏந்தி குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட அசோக் மோச்சி, இன்று சிவப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

குஜராத் இனப்படுகொலையின் முக்கிய நபராக அசோக் மோச்சியை சங் பரிவார் பயன்படுத்திக் கொண்டது. தன்னை இனப்படுகொலையின் ஒரு பகுதியாக ஆக்குவது உட்பட சங்க பரிவாரின் அனைத்து அட்டூழியங்களையும் அசோக் மோச்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

பாஜகவிடமிருந்து விடை பெற்ற அசோக் மோச்சி,பல இடங்களில் சங்க பரிவருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண் டுள்ளார். பின்பு அவர் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அசோக் மோச்சியுடன் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட குத்புதீன் அன்சாரியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply