மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

Mamta-Banerjee
Share this News:

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார்

பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு வங்கத்தை விரும்பி தங்கள் இடமாக ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தேர்தலின் போது மட்டுமே வந்து மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை ”என்று பானர்ஜி தெரிவித்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் ஆக வங்காளத்தை அனுமதிக்க மாட்டேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக பொய்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒரு கட்சி என்று அவர் மேலும் கூறினார். இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் போன்று வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் இடம் அல்ல. மம்தா மேலும் கூறினார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தாக்கி பேசிய மமதா, எல்லையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் போது அவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு எப்படி நேரத்தை ஒதுக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் இத்தகைய ஒரு உள்துறை அமைச்சரை தனது வாழ்க்கையில் பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply