பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

Share this News:

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ இல்லாததால், பீகார் அமைச்சரவையிலும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இம்முறை வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பீகாரில், ஆர்ஜேடிக்கு 8 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 4, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் (அகில இந்திய மஜிலிஸ்-இத்தேஹாதுல் முஸ்லிமீன்) 5, இடது சாரி கட்சிகள் 1, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 உள்ளது.

நிதீஷின் கட்சி மற்றும் பாஜக இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பதை உணர்ந்ததால் சிறுபான்மையினர் அந்த கூட்டணி கட்சிகளின் முஸ்லீம் வேட்பாளர்களை நிராகரித்ததாக மாநில அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் 1952 முதல் மாநில அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பல முக்கியமான அமைச்சகங்களையும் பதவிகளையும் வகித்தனர். கடந்த காலங்களில், முஸ்லிம்கள் சபாநாயகர்களாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply