கொரோனாவிலிருந்து கேரளா மீள்வதற்கு காரணம் இதுதான் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

திருவனந்தபுரம் (19 ஏப் 2020):கேரளாவில் கொரோனா வைரஸிலிருந்து மாநிலம் மீள்வதற்கு ஆயுர்வேத சிகிச்சையே காரணம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. ஷைலஜா தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோதி அறிவுறுத்தியிருந்ததாகவும், இதனை ஏற்று கேரள அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி….

மேலும்...

ஊரடங்கில் பெண் போலீசின் தில்லாலங்கடி வேலை!

சீர்காழி (19 ஏப் 2020): ஊரடங்கிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின் போது அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தனது கணவர் சோமசுந்தரரை அழைத்துக் கொண்டு சீர்காழி தென் பாதி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாமூல் வசூல் செய்துள்ளார். மேலும் தனது காவல் எல்லையைத் தாண்டி…

மேலும்...

போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் தினக்கூலி காய்கறி வண்டி – ஏழைகளுக்கு மட்டும்தான் சட்டமா?

மும்பை (19 ஏப் 2020): மும்பையில் தினக்கூலி காய்கறி வண்டி ஒன்று மும்பை போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளிகள்தான். அவர்களுக்கு தினமும் தொழில் செய்து அல்லது வேலை செய்து…

மேலும்...

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – தமிழக அரசு பதில்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பராலை கட்டுப்படுத்த நாடெங்கும் மே. 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு ஏப்ரல் 15 அன்று வெளியிட்ட ஆணையின்படி, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌…

மேலும்...

உண்மையை சொல்லுங்கள் – தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பரிசோதனை கருவி தமிழகத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை என்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சட்டீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது…

மேலும்...

கொரோனாவால் இதுவரை 23 லட்சம் பேர் பாதிப்பு!

நியூயார்க் (18 ஏப் 2020): உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உலகின் 200 க்கும் அதிகமான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்து 88 ஆயிரத்து 633 பேர்…

மேலும்...

கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவியது எப்படி? – அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன் (18 ஏப் 2020): கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகானத்தின் ஆய்வகத்திலிருந்து தவறாக வெளியேறியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை சீனாவின் வுகான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் அறிவித்திருந்தது. இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச்…

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த பாஜக!

சென்னை (18 ஏப் 2020): “கொரோனா குறித்து எதிர்கட்சிகளுடன் விவாதிக்க எதிர் கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா?” என்ற முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவ ஆலோசனை பெற எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? கரோனா…

மேலும்...

மசூதிகளில் நோன்பு கஞ்சி விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் – காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (18 ஏப் 2020): மசூதிகளில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம்.முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல்,…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் அப்பாவிகள் – உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!

புதுடெல்லி (18 ஏப் 2020): தேசத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியை பின்பற்றுபவர்கள் இல்லை; தப்லீகிகள் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று புதுதில்லி சிறுபான்மை கமிஷன் தலைவரான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் மற்றும் உறுப்பினர் கர்தார் சிங் கோச்சார் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு,ம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், கர்தார் சிங் கோச்சார் ஆகியோர் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும்…

மேலும்...