ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – தமிழக அரசு பதில்!

இச்செய்தியைப் பகிருங்கள்:

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பராலை கட்டுப்படுத்த நாடெங்கும் மே. 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசு ஏப்ரல் 15 அன்று வெளியிட்ட ஆணையின்படி, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ இதர சேவைகள்‌ இயங்கலாம்‌ என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்‌ என்று தெரிவித்திருந்தது. இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர்‌ குழுவை நியமித்து உள்ளது. அந்த குழு, தன்‌ முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களிடம்‌ ஏப்ரல் 20ஆம் தேதி அன்று தெரிவிக்க உள்ளது.

இந்தக்‌ குழுவின்‌ ஆலோசனைகளை ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ முடிவெடுக்க உள்ளார்கள்‌. எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசின்‌ ஆணைகள்‌ வெளியிடும்‌ வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள்‌ தொடர்ந்து நீடிக்கும்‌ என்று அரசு தெரிவித்துக்‌ கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply