தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை!

சென்னை (16 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் 217 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 127 பேருக்கும் திண்டுக்கல்லில் 65 பேருக்கும்…

மேலும்...

பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்த கொரொனா வைரஸ்!

திருவனந்தபுரம் (16 ஏப் 2020): கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே முதலாவதாக கொரோனா தொற்று பரவியது. இந்நிலையில் அங்கு புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் உள்ளன. இதன்மூலம் ‘இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம் தான்’ என முதல்வர்…

மேலும்...

கொரோனா சிகிச்சைக்கு பின் திருச்சியிலிருந்து 32 பேர் வீடு திரும்பல்!

திருச்சி (16 ஏப் 2020): கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 32 பேர், இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 32 பேர் பூரண குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கைதட்டி உற்சாகப்படுத்தி இன்று காலை…

மேலும்...

தீவிரவாத கும்பல் ஏன் இதை செய்கிறது? – நடிகர் சித்தார்த் பளார் கேள்வி!

சென்னை (16 ஏப் 2020): ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சுட்டிக்காட்டி, “தீவிரவாத கும்பல் இந்த வேலையயை செய்ய யார் அனுமதித்தது?” என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஊர்களில் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் சிலர் வெளியே வருவதும், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு நேரத்தில் வாகனத்தில் செல்லும் நபர்களை ஆர்.எஸ்.எஸ் கட்சியினர்…

மேலும்...

மலேசியாவுக்கு உதவ இந்தியா முடிவு!

புதுடெல்லி (16 ஏப் 2020): மலேசியாவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை கோரியதால் இந்தியா வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஜம்மு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு!

புதுடெல்லி (16 ஏப் 2020): இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது….

மேலும்...

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்!

சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக…

மேலும்...

முக்கியமான நேரத்தில் ட்ரம்பின் முடிவு – உலக தலைவர்கள் கவலை!

வாஷிங்டன் (15 ஏப் 2020): உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான…

மேலும்...

ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு…

மேலும்...

முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!

லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்….

மேலும்...