தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்ட வீடுகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்!

நாகர்கோவில் (20 ஏப் 2020): நாகர்கோவில் அருகே கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் உணவின்றி தவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளையில், கொரோனா பாதித்த இருவர், கடந்த 2 வாரங்களுக்‍குமுன் நாகர்கோவில் அரசு மருத்துவக்‍ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக சேர்க்‍கப்பட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வாட்ஸ் அப் மூலம் வீடியோ…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு சவூதியில் 10 இந்தியர்கள் மரணம்!

ரியாத் (20 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சவூதி அரேபியாவில் 10 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக் கிழமை வரை 9362 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 97 பேர் பலியாகியுள்ளனர். 1398 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள். இதில் நான்கு பேர் மதீனாவிலும், மூன்று பேர் மக்காவிலும், இருவர்…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி (19 ஏப் 2020): மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் பரிந்துரைத்து வருகின்றன. எனினும், இந்த மருந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படியே ஹைட்ராக்‍ஸி க்‍ளோரோகுயின்…

மேலும்...

அறிகுறிகள் இல்லாத கொரோனா பாஸிட்டிவ் – மருத்துவத் துறைக்கு தொடரும் சவால்கள்!

புதுடெல்லி (19 ஏப் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தற்போது அதிகமாக கொரோனா பாஸிட்டிவ் என தகவல்கள் வருவது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 893 பேருக்கு நோய்த்தொற்று உள்ளது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போதைக்கு ஊரடங்கை தளர்த்தும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். நேற்று கொரோனா தொற்று உறுதி…

மேலும்...

ஊரடங்கில் சாராய கடைகளை மூடி என்ன செய்ய!

திருச்சி (19 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால்மதுபான கடைகள், பார்கள் , டாஸ்மாக் போன்றவை மூடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மதுவுக்கு அடிமையாகி இருக்கும் பலரும் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் மற்றும் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கும் நிலைமையை எட்டியுள்ளனர். இது இப்படியிருக்க திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஒருவர் ராம்ஜி நகர் பகுதியில் கபசுரக் குடிநீர்…

மேலும்...

ரூ 10 கோடி நஷ்ட ஈடு – அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்!

புதுடெல்லி (19 ஏப் 2020): தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு மவ்லானா சஜ்ஜாத் நோமானி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசும் வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக…

மேலும்...

திங்கள் முதல் பணிக்கு வர அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் நாளை (20 ஏப்ரல் திங்கள் கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:- அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக்…

மேலும்...

கொரோனா: அப்படி என்ன இருக்கிறது இந்த ரேபிட் டெஸ்ட் முறையில்?

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு வாங்கியுள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகமானோருக்கு அதிவிரைவாக மேற்கொள்ள வேண்டி சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்ததா? அல்லது இல்லையா? அது அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாகவும் பல சர்சைகள் எழுந்துள்ளன. இது இப்படியிருக்க. ரேபிட் டெஸ்ட்…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

முன்னுக்‍குப்பின் முரணான தகவல்கள் – குழப்பம்: டிடிவி தினகரன் சாடல்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தடுப்புப் பணி பற்றி, முதலமைச்சர் முதல், அதிகாரிகள் வரை தொடர்ந்து முன்னுக்‍குப்பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் . டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கூறியிருப்பதாவது; “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்புப்பணிகளில் தொடக்கம் முதலே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக்…

மேலும்...