மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்கிறார். இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பிரதமர் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர்…

மேலும்...
Durai Murugan

பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த துரைமுருகன் – நாங்க எல்லாரும் ஒன்றுதான் என்று பதில்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): டெல்லியில் அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த நிலையில், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார். அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இது விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை…

மேலும்...

சிறுபான்மை வாக்குகளை இழந்ததால் தோல்வி – பாஜக மீது அதிமுக சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை (07 ஜூலை 2021): “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிமுக மீது பாஜகவும் கடும் விமர்சனம் வைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக ஆட்சி வர வேண்டும்…

மேலும்...

கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப்…

மேலும்...

எச்.ராஜா தோல்விக்கு யார் காரணம்? – உண்மையை போட்டுடைத்த பாஜகவினர்!

காரைக்குடி (05 ஜூலை 2021): கடந்த சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவின் தோல்விக்கு யார் காரணம்? என்பதை போட்டுடைத்துள்ளனர் பாஜக நிர்வாகிகள். கடந்த தேர்தலில் எச்.ராஜாவின் படுதோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை எச்.ராஜா தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று…

மேலும்...

பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கிய பாஜக முதல்வர்!

டேராடூன் (04 ஜூலை 2021): உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக நியமித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன இவர், 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி. அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்;…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்….

மேலும்...

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக தலைவர் கைது!

லக்னோ (26 ஜூன் 2021): உத்தரபிரதேசத்தில் இளம் பெணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லியாவில் உள்ள பாஜக தலைவர் 23 வயதான பிரிஜ் மோகன் பாண்டே, 23 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடை பட்டதாகவும் இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த…

மேலும்...

எச் ராஜா மீது நடவடிக்கை? – பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

சென்னை (26 ஜூன் 2021): கட்சி பணத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் வீடு கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தற்கு பாஜக நிர்வாகிகள்தான் கரணம் என்று சரமாரியாக குற்றம் சாட்டினார். ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில்…

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...