பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கிய பாஜக முதல்வர்!

Share this News:

டேராடூன் (04 ஜூலை 2021): உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக நியமித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன இவர், 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி.

அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் இலங்கை, வங்கதேசம் என பல நாடுகளும் இந்த அகண்டபாரதம் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. இப்போது இந்த பழைய ட்வீட்டை முன்வைத்து இப்படியானவரையா உத்தரகாண்ட் முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக பாஜகவிலேயே எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Share this News:

Leave a Reply