பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக தலைவர் கைது!

சென்னை (26 ஆக 2021): சென்னையில் தாய்க்கும் மக்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜகவை சேர்ந்தவரை ஆந்திர மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(55). பா.ஜ.க.வை சேர்ந்த இவர் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த 2018ஆம் ஆண்டு தன்னிடம் பார்த்தசாரதி தவறாக நடந்து கொண்டதாக சித்ரா கொடுங்கையூர் போலீசில் புகார்…

மேலும்...

ஒன்றிய அமைச்சரை கைது செய்தது உத்தவ் தாக்கரே அரசு – மகாராஷ்டிராவில் பரபரப்பு!

மும்பை (24 ஆக 2021): ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்து மகாராஷ்டிரா அரசு பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார். இதற்கு சிவசேனா கொந்தளித்தது. மேலும் சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய…

மேலும்...

ஆபாச வீடியோவில் பாஜக தலைவர் கே.டி.ராகவன் – அதிர்ச்சியில் தமிழக பாஜக!

சென்னை (24 ஆக 2021): பாஜக தலைவர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரு யுடூபர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கே.டி ராகவன் பூஜை அறையில் இருந்தவாறு பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசியவாறு காம சேஷ்டையில் ஈடுபவதாக அமைந்துள்ளது. இந்த விடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையே அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறியுள்ள ராகவன், பாஜக தலைவர்…

மேலும்...

பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (22 ஆக 2021): மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் (வயது 78) தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு…

மேலும்...

இவங்களுக்கு வேற வேலையே இல்லை – இப்போது ஆப்கானிஸ்தானை கையில் எடுத்துள்ளார்கள்!

பாட்னா(19 ஆக 2021): அரசை விமர்சிப்பர்வர்கள் ஆப்கானிஸ்தான் செல்லாம் என்று பிகார் பாஜக எம்.எல். ஏ ஹரிபூஷன் தாக்கூர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக எதிர் காட்சிகள் விமர்சிக்கும் நிலையில் , பீகாரில் பிஸ்ஃபி தொகுதியின் எம் எல் ஏ ஹரிபூஷன் தாக்கூர், அரசை விமர்சிப்பவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம் என்றார். மேலும் ,அவர் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மலிவானவை என்றும் , இந்திய அரசை எதிர்ப்பவர்கள் அங்கு…

மேலும்...

மோடி இந்த முறையாவது தொகையை மாற்றி கூறியிருக்கலாம் – எதிர் கட்சிகள் விமர்சனம்!

புதுடெல்லி (16 ஆக 2021): பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளாக ஒரே உரையை நிகழ்த்தி வருவதாகவும், திட்டங்களை அறிவிப்பதைத் தவிர அதை செயல்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கட்கே தெரிவிக்கையில், “மோடி திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட யாருக்கும் எதுவும் செய்யவிலை.மோடி நிறைய விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் எதுவும் உறுதியாக நிற்கவில்லை” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், ” பிரதமரால் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

ராஜீவ் காந்தி பெயரில் விருது அறிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு சிவசேனா அரசு பதிலடி!

மும்பை (11 ஆக 2021): ஐடி துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் மகாராஷ்டிரா அரசு விருது அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் விருது, ஜர் தியானசந்த் கேல் ரத்னா என்று மாற்ற மோடி அரசு எடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அரசு எதிராக அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்து அவர்…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் அடைக்கலம்!

சென்னை (09 ஆக 2021); கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும், திமுகவை தரக்குறைவாகவும் பாஜகவின் அமைச்சர் போன்றே மோடியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசிவந்த அவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மிக அமைதியானார். தான் முன்னர் பேசியதற்கு கூட வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் பாஜகவில்…

மேலும்...

பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அந்த சுடுகாட்டில்…

மேலும்...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு எப்போது தெரியுமா?

லக்னோ (04 ஆக 2021): அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்வாவினரால் இடிக்கப்பட்டது. மேலும் அங்கு ராமர் கோவிலை கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்வாவினர் முழுமூச்சாக இருந்தனர். எனினும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் முஸ்லிம்களால் தொடரப்பட்ட வழக்கு உச்ச…

மேலும்...