தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா…

மேலும்...

பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

சென்னை (29 ஜூலை 2021): கர்நாடக பாஜக அரசை எதிர்த்து, தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

இளைஞர் உயிரோடு எரிப்பு – பாஜக நிர்வாகி கைது!

புதுச்சேரி (27 ஜூலை 2021): புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை உயிரோடு எரித்த புகாரில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மௌரியா. மாநில பாஜக வணிக பிரிவு அமைப்பாளராக உள்ள இவர், மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பெட்ரோல் பங்க்கிற்கு நள்ளிரவு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது ராஜ மௌரியா, சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது….

மேலும்...
Yediyurappa

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா!

பெங்களூரு (26 ஜூலை 2021): கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 16ம்…

மேலும்...

1455 கிலோ குட்கா பதுக்கல் – சிக்கிய பாஜக நிர்வாகி!

சென்னை (25 ஜூலை 2021): ஆத்தூர் அருகே, 1455 கிலோ குட்கா பொருட்கள் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, அதன் விற்பனையை முழுமையாக தடுக்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்….

மேலும்...

பயமிருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் – காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி ஆவேசம்!

புதுடெல்லி (17 ஜூலை 2021): காங்கிரஸ் கட்சியில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய…

மேலும்...

பாஜக எல் முருகன் பதவி பறிப்பு – தொல். திருமாவளவன் பரபரப்பு தகவல்!

நாகை (12 ஜூலை 2021): பாஜக தலைமையால் எல்.முருகன் அவமதிக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் அலுவலகம் திறப்பு, சிதம்பரம் அடுத்த புவனகிரியில் டாக்டர் அம்ப்தேகர் கைத்தறி பட்டு சொசைட்டி திறப்பு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அலுவலக திறப்பு ஆகியவற்றில் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது…

மேலும்...

எங்களை மதிக்காத கட்சியில் எதற்கு இருக்கணும் – பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்!

மும்பை (11 ஜூலை 2021): மகாராஷ்டிராவின் ப்ரீதம் முண்டேவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதினான்கு பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் பாஜக எம்.பியும் மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளுமான ப்ரீதம் முண்டே-விற்கும் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. “எங்கள் தலைவர் மதிக்கப்படாத இடத்தில் அந்த கட்சியில் நீடிப்பதன் அர்த்தம் என்ன?” என்பதாக கட்சியிலிருந்து இதுவரை விலகியவர்கள் தெரிவித்துள்ளனர். ப்ரிதம் முண்டே அமைச்சரவை பதவி…

மேலும்...

யூசுப் கான் இந்தியாவின் பெருமை – பாஜக தலைவருக்கு பிரபல நடிகை குட்டு!

மும்பை (08 ஜூலை 2021): புதன்கிழமை காலமான திரையுலக ஜாம்பவான் திலீப் குமார், (யூசுப் கான் ) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவருக்கு நடிகையும் -அரசியல்வாதியான உர்மிளா மாடோண்ட்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமுறைகளின் இதயங்களை ஆட்சி செய்த இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் குமார் (முகமது யூசுப் கான்) 1922 டிசம்பர் 11 அன்று பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்தார். அவர் ஒரு நடிகரானபோது, பம்பாய் டாக்கீஸின் தலைவராக இருந்த…

மேலும்...

புதிய ஆளுநர்கள் நியமனம் -குஷ்பு கொந்தளிப்பு !

சென்னை (07 ஜுலை 2021): எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு இதில் பாகுபாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக…

மேலும்...