எச் ராஜா மீது நடவடிக்கை? – பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

Share this News:

சென்னை (26 ஜூன் 2021): கட்சி பணத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் வீடு கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தற்கு பாஜக நிர்வாகிகள்தான் கரணம் என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினர்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் ரூ4 கோடியை எச். ராஜா பதுக்கி தற்போது பங்களா கட்டி வருகிறார் என்றும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் எச். ராஜா மீதான ரூ4 கோடி பணம் பதுக்கல் புகார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முருகன், இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எல்.முருகனின் இந்த கருத்து பா.ஜ.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply