மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்!

Share this News:

புதுடெல்லி (07 ஜூலை 2021): தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்கிறார். இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பிரதமர் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply