பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Share this News:

சென்னை (22 ஆக 2021): மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் (வயது 78) தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார்.

சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இல. கணேசருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply