அயோத்தி ராமர் கோவில் திறப்பு எப்போது தெரியுமா?

Share this News:

லக்னோ (04 ஆக 2021): அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்வாவினரால் இடிக்கப்பட்டது. மேலும் அங்கு ராமர் கோவிலை கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்வாவினர் முழுமூச்சாக இருந்தனர். எனினும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் முஸ்லிம்களால் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

எனினும் ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் 2023-ஆம் ஆண்டு ராமர் கோவில் திறக்கப்படும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே ராமர் கோவிலுக்கு இடம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே புகார் எழுந்து அது ஒருபுறம் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply